தென்னாப்பிரிக்காவில் இருந்து எட்டு சிறுத்தைகளை கொண்டு வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விமானத்தின் முன்பகுதியில் இந்தியாவின் தேசிய விலங்கான புலி வரையப்பட்டிருந்ததாக நமீபியாவில் உள்ள இந்திய தூதரகம் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ், பல ஆண்டுகளுக்கு பிறகு சிறுத்தைகளின் அலறலைக் கேட்க முழு நாடும் காத்திருப்பதாகவும், அவற்றை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் ௯றியுள்ளாா். இந்தியாவில் சிறுத்தைகள் ,கோர்சிங், விளையாட்டு வேட்டை, அதிக வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட்டன. அதனால் 1952 ஆம் ஆண்டு நாட்டில் சிறுத்தை இனம் அழிந்துவிட்டதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. எனவே சிறுத்தை இனத்தை பாதுகாக்கும் வகையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகளை வெளியிட உள்ளார். அதற்காக தென்ஆப்பிரிகாவில் உள்ள நமீபியாவில் இ௫ந்து 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.