சென்னை சென்ட்ரல் - திருப்பதி ரயில் சேவை ரத்து

February 23, 2024

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலும், திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் நான்கு நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பதியில் இருந்து காலை சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு மாலை புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து […]

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலும், திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் நான்கு நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பதியில் இருந்து காலை சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு மாலை புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு மைசூருக்கு புறப்பட்டு செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் 26, 27 மற்றும் மார்ச் 11,12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மருமார்க்கமாக மைசூரில் இருந்து இரவு சென்னை சென்ட்ரல் புறப்படும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் 27,28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu