சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து மனித தவறே காரணம்- விசாரணை அறிக்கை

சென்னை கோரமண்டல் ரெயில் விபத்துக்கு மனித தவறே காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்காளத்தில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் 2-ந் தேதி ஒடிசாவில் விபத்தை சந்தித்தது. இந்த விபத்தில் 291 பயணிகள் உயிரிழந்துள்ளனர் . ரெயில் விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி ரெயில்வே பாதுகாப்பு பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை அறிக்கை கடந்த வாரம் ரெயில்வே அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 3 ரெயில்கள் […]

சென்னை கோரமண்டல் ரெயில் விபத்துக்கு மனித தவறே காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்காளத்தில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் 2-ந் தேதி ஒடிசாவில் விபத்தை சந்தித்தது. இந்த விபத்தில் 291 பயணிகள் உயிரிழந்துள்ளனர் . ரெயில் விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி ரெயில்வே பாதுகாப்பு பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை அறிக்கை கடந்த வாரம் ரெயில்வே அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சிக்னல் மாற்றத்தை கவனித்து இருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம். மேலும் இதுதொடர்பாக ஸ்டேசன் மாஸ்டரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu