மாநகராட்சி எல்லையில் உள்ள காலி நிலங்களை சுத்தமாக வைத்திருக்க கடுமையான வழிகாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீறினால் அபராதமும், தொடர்ந்து மீறினால் தினசரி அபராதமும் விதிக்கப்படும்.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள காலி நில உரிமையாளர்களுக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. காலிமனையில் குப்பை, மழைநீர், செடிகள் போன்றவை தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நில எல்லையை சுற்றி பாதுகாப்பான வேலி கட்ட வேண்டும். திடக்கழிவு, கட்டிட கழிவு, அல்லது தீயாக எரிக்கும் செயல்கள் கூடாது. இவை மீறப்பட்டால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து தவறு நடைபெறுமென்றால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் செலுத்த வேண்டியதாகவும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.














