சென்னை மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டி இணைக்க முடிவு

October 5, 2023

சென்னை மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.சென்னையில் தினமும் 630 க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.இந்த ரயில்களில் மொத்தம் 14 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் இயங்கி வருகிறது. இதில் பெண்களுக்கான தனிப்பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகள் என இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அடுத்து தெற்கு […]

சென்னை மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.சென்னையில் தினமும் 630 க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.இந்த ரயில்களில் மொத்தம் 14 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் இயங்கி வருகிறது. இதில் பெண்களுக்கான தனிப்பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகள் என இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அடுத்து தெற்கு ரயில்வே சென்னை புறநகர் மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டியை வைக்க ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் மின்சார ரயில்களில் இரண்டு முதல் மூன்று குளிர்சாதன பெட்டி இணைக்கப்பட உள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ சி எப் எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஏசி பெட்டிகள் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக சென்னை கடற்கரை- தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த குளிர்சாதன பெட்டிகள் இணைத்த மின்சார ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை இணைக்கப்படும் பட்சத்தில் இவற்றிற்கான கட்டணமும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu