சென்னையிலிருந்து டெல்லி மற்றும் அகமதாபாத் புறப்பட்ட விமானம் திடீரென தாமதமானதால் பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை புறப்பட இருந்த விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதில் 154 பேர் பயணம் செய்ய இருந்தனர். ஆனால் இரவு 8 மணி வரை விமானம் புறப்பாடு நடைபெறவில்லை. இதனால் பொறுமை இழந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் சமாதானப்படுத்தி இரவு 9:25 மற்றும் 10 மணியளவில் விமான புறப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து எந்த வித விமானமும் புரப்படவில்லை. அதேபோல் அகமதாபாத்திற்கு செல்ல வேண்டிய அதே நிறுவனத்தின் மற்றொரு விமானமும் புறப்படவில்லை. இதனால் டெல்லி பயணிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு மேலும் வாக்குவாதம் செய்யப்பட்டது. இதனால் உள்நாட்டு விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.