தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான கட்டணம் வழக்கத்தை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பஸ்,ரயில் மற்றும் விமானம் மூலம் பயணம் செய்வது வழக்கமாகும். இந்த வருடம் பெரும்பாலானோர் பயண நேரம் குறைவு என்பதால் விமானத்தில் பயணம் செய்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று முதல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்களில் பயணம் செய்ய அதிகமாக டிக்கெட் விற்று வருகின்றன. இந்நிலையில் டிக்கெட் கட்டணம் மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக சென்னை - சேலம் செல்வதற்கு ரூபாய் 2390 ஆகும் . ஆனால் இன்றும் நாளையும் இதன் கட்டம் கட்டணம் 11,054 ஆக உள்ளது. இதேபோல தூத்துக்குடி செல்ல 13,287ரூபாய், கோவை செல்ல 13,750 ரூபாய்,திருச்சி 13,086, மதுரை செல்ல 13,415 ரூபாய் ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.