இரண்டாவது நாளாக சென்னை விமான சேவை பாதிப்பு

மைக்ரோசாப்ட் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரண்டாவது நாளாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் இயங்குதளத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மென்பொருளை பயன்படுத்தி வரும் பல்வேறு நிறுவனங்கள் முடங்கியது. இது இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது காரணமாக தொழில்நுட்ப சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இதற்கான காரணத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.மேலும் மைக்ரோசாப்ட்டிலோ அல்லது விண்டோசிலோ எவ்வித பாதிப்பும் இல்லை. கிரவுட்ஸ் ஸ்ட்ரைக் அப்டேட்டில் […]

மைக்ரோசாப்ட் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரண்டாவது நாளாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் இயங்குதளத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மென்பொருளை பயன்படுத்தி வரும் பல்வேறு நிறுவனங்கள் முடங்கியது. இது இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது காரணமாக தொழில்நுட்ப சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இதற்கான காரணத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.மேலும் மைக்ரோசாப்ட்டிலோ அல்லது விண்டோசிலோ எவ்வித பாதிப்பும் இல்லை. கிரவுட்ஸ் ஸ்ட்ரைக் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று தற்போது வரை 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு இன்று மதியத்திற்குள் முழுமையாக சீரடைந்து விடும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu