முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை நான்கு மாதங்கள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் வரும் ஜூலை 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை நான்கு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.