ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை விமான நிலையங்களில் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகை 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கேரள மாநிலத்தவர்கள் கேரளாவிற்கு விமானத்தில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அங்கு வழக்கமாக வசூலிக்கப்படும் விமான கட்டணங்களை விட மூன்று மடங்கு அதிகமாக டிக்கெட் விற்கப்படுகிறது. வழக்கமாக சென்னை - திருவனந்தபுரம் டிக்கெட் கட்டணம் ரூபாய் 3,225 ஆக இருந்த நிலையில் தற்போது 11 ஆயிரம் முதல் 19,089 ரூபாய் வரை உள்ளது. அதேபோல் சென்னை- கொச்சி விமான கட்டணம் 2,962 இல் இருந்து தற்போது ரூபாய் 6500 முதல் 10,243 ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றன. மேலும் சென்னை - கோழிக்கோடு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.