எண்ணூர் ரயில் நிலையத்தில் உயிர் மின்னழுத்த கோளாறு காரணமாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில் பழுதடைந்துள்ளது.
சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் பழுதடைந்தது. அதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயிலை நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதனால் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் சேவை பாதிப்பினால் ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரயில் நிலையம் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் எண்ணூர் ரயில் நிலையத்தில் ஒன்றன்பின் ஒன்றாக ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.