அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ நகர மேயருடன் சென்னை மேயர் கலந்துரையாடல் நடத்தினார்.
சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்க நாட்டின் சான் ஆன்டோனியோ நகரம் ஆகியவை இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங்பேடி, மாநகராட்சியின் கட்டமைப்பு, திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவரித்தார்.
இந்நிகழ்வில் சகோதரத்துவ நகரங்களின் இணைப்பாக 2 மாநகரங்களின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு விஷயங்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2 மேயர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவோம் எனத் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்ட அரங்கை அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ நகர மேயர் மற்றும் அவரது குழுவினர் பார்வையிட்டனர்.