சென்னை வானிலை ஆய்வு மையத்தில் புதிய தலைவர் நியமனம்

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் 34 ஆண்டுகள் சேவையாற்றிய பாலச்சந்திரன் பணி ஓய்வு பெறுகிறார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்று சென்னை வானிலை ஆய்வு மையம். இந்த மையம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களின் வானிலை தொடர்பான செயல்பாடுகளை கவனிக்கின்றது. இங்கு, 34 ஆண்டுகளாக சேவையாற்றிய சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பணி ஓய்வு […]

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் 34 ஆண்டுகள் சேவையாற்றிய பாலச்சந்திரன் பணி ஓய்வு பெறுகிறார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்று சென்னை வானிலை ஆய்வு மையம். இந்த மையம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களின் வானிலை தொடர்பான செயல்பாடுகளை கவனிக்கின்றது. இங்கு, 34 ஆண்டுகளாக சேவையாற்றிய சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பணி ஓய்வு பெறுகின்றார். அவருக்குப் பிறகு, அமுதா புதிய தலைவராக நாளை பொறுப்பேற்கிறார். அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகள் தொடர்பில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu