சென்னை மெட்ரோ 2-வது கட்ட திட்டத்தில் பூந்தமல்லியில் ஓட்டுநர் இல்லாத ரெயிலின் சோதனை ஓட்டம் வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை மெட்ரோ 2-வது கட்ட திட்டம், 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதில், மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பனிமனை (26.1 கி.மீ) மற்றும் மாதவரம் இருந்து சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) என 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதில் ஓட்டுநர் இல்லாமல் செயல்படும் ரெயில்கள் முக்கிய அம்சமாக உள்ளது. 36 மெட்ரோ ரெயில்களுக்கு 1,215.92 கோடியை செலவழித்து அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. முதலில் தயாரிக்கப்பட்ட ரெயிலை செப்டம்பர் 22-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஓட்டுநர் இல்லாத ரயிலின் சோதனை ஓட்டம், பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது.