பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்தில் ஒரே QR பயணச்சீட்டு வசதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய "சென்னை ஒன்" செயலியில் அறிமுகம்.
இந்தியாவில் முதல்முறையாக, பொதுமக்கள் ஒரே QR பயணச்சீட்டின் மூலம் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், கேப், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் வகையில், "சென்னை ஒன்" மொபைல் செயலியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இச்செயலி மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளலாம். மேலும், யூபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச்சீட்டுகளை வாங்கவும், ஒரே பயணப் பதிவின் மூலம் பல்வேறு போக்குவரத்து முறைகளில் தொடர்ச்சியாக பயணிக்கவும் முடியும்.
இந்த செயலி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பொதுமக்கள் பயன்படுத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி பயணச்சீட்டு பெற வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. மொபைல் மூலமாக எளிதில் கட்டணம் செலுத்தி சீட்டை பெற்று பயணம் செய்யலாம். "சென்னை ஒன்" செயலி, நகரத்தின் பொதுப் போக்குவரத்து சேவையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.