சென்னை துறைமுகம்-மதுரவாயல் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணி 3 மாதத்தில் தொடங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். நீர்வளத்துறைக்கும், தேசிய நெடுஞ்சாலை துறைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் 2012-ல் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 2019-ல் இத்திட்டத்தை புதுப்பிக்க முடிவு செய்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய மந்திரி நிதின் கட்கரி இத்திட்டத்தை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திடம் மறுவடிவமைப்பு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி இத்திட்டம் புதிய வடிவில் செயல்படுத்த இறுதி செய்யப்பட்டது.
இது குறித்து துறை அதிகாரிகள் கூறுகையில், துறைமுகம்-மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலத் திட்டம் ரூ.5,855 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. 20.6 கி.மீ நீளத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பால திட்டப்பணி 4 தொகுப்புகளாக 12 கி.மீ தூரத்திற்கு இரட்டை அடுக்கு வழித்தடமாக அமைகிறது. இத்திட்டம் 3 மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.