சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடரும் என உறுதி

August 13, 2025

தூய்மை பணியாளர்கள் போராட்டம் நீடிக்கும் நிலையில், சென்னை நகராட்சியின் பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைந்தது. அவர்கள், முதல்வரின் தலைமையிலான பேச்சுவார்த்தை மட்டும் நம்பிக்கை தரும் என தெரிவித்துள்ளனர். சென்னையில் நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தையடுத்து, அவர்களை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர் சேகர்பாபு, கே.என். நேரு, மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பணியாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை. போராட்டக்குழு, “100 சதவீதம் உறுதியாக […]

தூய்மை பணியாளர்கள் போராட்டம் நீடிக்கும் நிலையில், சென்னை நகராட்சியின் பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைந்தது. அவர்கள், முதல்வரின் தலைமையிலான பேச்சுவார்த்தை மட்டும் நம்பிக்கை தரும் என தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தையடுத்து, அவர்களை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர் சேகர்பாபு, கே.என். நேரு, மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பணியாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை. போராட்டக்குழு, “100 சதவீதம் உறுதியாக போராட்டம் தொடரும்; முதலமைச்சர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்றும், அப்புறப்படுத்த முயற்சிகள் பயனில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu