சென்னை திருப்பதி ரயில் சேவைகள் ரத்து

September 26, 2023

சென்னை-திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.சென்னை சென்ட்ரலில் இருந்து ரெயில்கள் தினமும் திருப்பதிக்கு செல்லும். தற்போது ரேணிகுண்டா பகுதியில் நடைபெற்று வரும் தண்டவாளம் மேம்பாட்டு பணி காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு செல்லும் விரைவு ரயில்கள் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட உள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 6:25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில், […]

சென்னை-திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.சென்னை சென்ட்ரலில் இருந்து ரெயில்கள் தினமும் திருப்பதிக்கு செல்லும். தற்போது ரேணிகுண்டா பகுதியில் நடைபெற்று வரும் தண்டவாளம் மேம்பாட்டு பணி காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு செல்லும் விரைவு ரயில்கள் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட உள்ளன.
சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 6:25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில், பிற்பகல் 2:15 மணிக்கு புறப்படும் திருப்பதி விரைவு ரயில், மாலை 4.35 மணிக்கு புறப்படும் கருடாத்ரி விரைவு ரயில் ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் திருப்பதியில் இருந்து காலை 6.25-க்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில், காலை 10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் மற்றும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu