உக்ரைனில் செர்னிஹிவ் மீது ரஷ்யா தாக்குதல் - 17 பேர் பலி

April 18, 2024

செர்னிஹிவ் மாகாணத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் போதிய ஆயுத உதவி கிடைக்காததால் உக்ரைன் போரில் பின்தங்கியுள்ளது. ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. ரஷ்யாவும் கடந்த சில நாட்களாக உக்ரைனின் மின் கட்டமைப்பை குறிவைத்து கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யா - பெலாரஸ் எல்லையில் உள்ள செர்னிஹிவ் […]

செர்னிஹிவ் மாகாணத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் போதிய ஆயுத உதவி கிடைக்காததால் உக்ரைன் போரில் பின்தங்கியுள்ளது. ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. ரஷ்யாவும் கடந்த சில நாட்களாக உக்ரைனின் மின் கட்டமைப்பை குறிவைத்து கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யா - பெலாரஸ் எல்லையில் உள்ள செர்னிஹிவ் மாகாணத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா அடுத்தடுத்து 3 ஏவுகணை தாக்குதல்
நடத்தியது. அது எட்டடுக்கு மாடி கட்டிடத்தின் மீது விழுந்ததில் 17 பேர் பலியாகினர். 61 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த இடுப்பாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் மீட்பு படையினர் சேர்த்துள்ளனர். இந்த மாகாணத்தில் 2.5 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள 80 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளுக்கு நாடாளுமன்றத்தில் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கத்திய நாடுகள் உரிய நேரத்தில் உதவி இருந்தால் இந்த தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu