கொரோனா பாதிப்பு அதிகரித்தால் வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரே நாளில் 4,435 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் முக கவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறுகையில், கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என்ற பத்திரிகை செய்திகளை நாங்கள் பார்த்தோம். அதனால், வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராவது மற்றும் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவது ஆகிய இரண்டு முறைகளையும் பயன்படுத்தலாம். நீங்கள் ஆன்லைன் வழியே வழக்கில் ஆஜராகி வாதிட்டாலும், நாங்கள் வழக்கு விசாரணையை நடத்துவோம் என்று கூறியுள்ளார்.