தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றார்

August 27, 2022

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய என்.வி ரமணா நேற்று ஓய்வு பெற்றார். உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்தாண்டு ஏப்ரல் 24-ம்தேதி பதவி ஏற்றார். தலைமை நீதிபதியாக 16 மாதங்கள் பணியாற்றிய இவர் நேற்றுடன் ஓய்வு பெற்றார். அதன்பின் டெல்லி உயர் நீதிமன்ற வக்கீல் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பிரியா விடை நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில், உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் பணியாற்றினேன் என நம்புகிறேன். என்னால் […]

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய என்.வி ரமணா நேற்று ஓய்வு பெற்றார்.

உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்தாண்டு ஏப்ரல் 24-ம்தேதி பதவி ஏற்றார். தலைமை நீதிபதியாக 16 மாதங்கள் பணியாற்றிய இவர் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

அதன்பின் டெல்லி உயர் நீதிமன்ற வக்கீல் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பிரியா விடை நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில், உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் பணியாற்றினேன் என நம்புகிறேன். என்னால் முடிந்த அளவு தலைமை நீதிபதியாக எனது கடமைகளை செய்தேன். உயர்நீதிமன்றங்களில் 234 நீதிபதிகளை நாம் வெற்றிகரமாக நியமித்தோம்.உச்சநீதிமன்றம் மற்றும் கொலீஜியத்தில் உள்ள சகோதர மற்றும் சகோதரி நீதிபதிகள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாலை 8 மணி வரை பணியாற்றும் கடின உழைப்பாளிகள். இது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும் என்றார். மேலும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மிகப்பெரிய சவால்களாக உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்குகளை பட்டியலிடுவதில் அதிக கவனம் செலுத்தமுடியவில்லை. இதற்காக வருத்தப்படுகிறேன். இப்பிரச்சினைக்கு தீர்வு காண நவீன தொழில்நுட்பத்தையும், செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மூத்தவக்கீல் துஷ்யந்த் தவே கூறுகையில், மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு மக்களின் நீதிபதியாக நீங்கள் இருந்தீர்கள். அவர்களது உரிமைகளையும், அரசியலமைப்பு சட்டத்தையும் நீங்கள் நிலைநாட்டினீர்கள் என்று அவர் கண்ணீர் மல்க பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu