மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் முதலமைச்சர் கான்ராட் சங்மா

மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் முதலமைச்சர் கான்ராட் சங்மா உரிமை கோரினார். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 27ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலை என்.பி.பி. கட்சியும், பா.ஜ.க.வும் தனித்தனியே சந்தித்தன. தற்போதைய ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி […]

மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் முதலமைச்சர் கான்ராட் சங்மா உரிமை கோரினார்.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 27ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலை என்.பி.பி. கட்சியும், பா.ஜ.க.வும் தனித்தனியே சந்தித்தன. தற்போதைய ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், மேகாலயாவில் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை உள்ளதாக அக்கட்சியின் தேசிய மக்கள் கட்சி தலைவரும், முதலமைச்சருமான கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மேகாலய ஆளுநர் பாகு சௌஹானை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க கான்ராட் சங்மா இன்று உரிமை கோரியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu