தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.5 கோடி நிதி அளிப்பு

February 4, 2023

தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.5 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலமாக கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது. அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு விருதுநகர் மாவட்ட […]

தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.5 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலமாக கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது. அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ரூ.5 கோடி பங்களிப்பு நிதியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu