ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல்
களம் சூடு பிடித்துள்ளது. இதில் திமுக தனது வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. அதன்படி நாளை மறுநாள் திமுக போட்டியிடும் 21 தொகுதி வேட்பாளர்களை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து உடனடியாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவும் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். மேலும் வேட்பு மனு தாக்கல் முடிந்து மனு பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும் தேர்தலுக்காக வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய 17 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த வார இறுதியில் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி முதலமைச்சர் வருகிற 22 ஆம் தேதி திருச்சி அருகே சிறகினூரில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு 23ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேச உள்ளார். மேலும் திருவாரூரில் தொடங்கி 39 தொகுதிகளுக்கு முதலமைச்சர் செல்ல திட்டமிட்டுள்ளார். மொத்தம் 15 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய செய்து ஆதரவு திரட்ட உள்ளார். தமிழகம் முழுவதும் 15 ஊர்களில் பொதுக்கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.














