பெண் காவலர்கள் நலனுக்காக 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

March 17, 2023

பெண் காவலர்கள் நலனுக்காக 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பொன்விழாவில் அவள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பெண் காவலர்கள் நலனுக்காக 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் பெண் காவலர்களுக்கு கலைஞர் பெயரில் விருது வழங்கப்படும். காவல்துறைக்கு […]

பெண் காவலர்கள் நலனுக்காக 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பொன்விழாவில் அவள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பெண் காவலர்கள் நலனுக்காக 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் பெண் காவலர்களுக்கு கலைஞர் பெயரில் விருது வழங்கப்படும்.

காவல்துறைக்கு பெண்கள் என்னும் தேசிய மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும். பெண் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும் போட்டி தனியாக நடத்தப்பட்டு விருது, பரிசுகள் வழங்கப்படும். அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வறை அமைக்கப்படும். பெண் காவலர்களின் குடும்பச் சூழலுக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu