ஸ்பெயின் பயணம் செல்லும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

January 22, 2024

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிற 28ஆம் தேதி ஸ்பெயின் சென்று அங்கு பல தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். இதன் பொருட்டு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்த மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த […]

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிற 28ஆம் தேதி ஸ்பெயின் சென்று அங்கு பல தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். இதன் பொருட்டு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்த மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி,டென்மார்க், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பங்குதாரர்களாகவும், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தாய்பெய் பொருளாதார மற்றும் சர்வதேச பங்குதாரர்களாக தமிழ்நாடு அரசிடம் இணைந்து செயல்பட்டது. இதில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

மேலும் பொதுத்துறை நிறுவனங்களும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன. மேலும் பல லட்சம் முதலீடுகள் ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 28ஆம் தேதி ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா செல்ல உள்ளார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா செல்கிறார். இதற்கான பயணத்திட்ட ஏற்பாடுகள் தொழில் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் ஐந்து நாட்கள் அமையும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu