முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நாளை திருவாரூர் செல்கிறார்.
வருகிற 22-ந்தேதி திருவாரூரில் இருந்து கார் மூலம் மன்னார்குடிக்கு சென்று மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமணத்தை நடத்தி வைக்கிறார். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு அவர் மீண்டும் சாலை மார்க்கமாக திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு ஐ.ஜி. கார்த்திகேயன் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.














