முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மே 29ஆம் தேதி ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அனைத்து கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சென்று தங்கி சுற்றுலாத்தலங்களை ரசித்து வருகின்றனர். அவ்வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிற 29ஆம் தேதி ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார். இதற்காக இவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு செல்கிறார். கொடைக்கானலில் மே 4ம் தேதி வரை குடும்பத்துடன் தங்க உள்ளார். இதற்காக சுமார் 1500 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.