மக்களுடன் முதல்வர் திட்டம் ஜூலை முதல் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள்

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்டமானது ஜூலை 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக நகர்ப்புற, உள்ளாட்சிகளுக்காக தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கிய துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் […]

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்டமானது ஜூலை 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக நகர்ப்புற, உள்ளாட்சிகளுக்காக தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கிய துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைத்து அனைத்து கோரிக்கையும் பெற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அவ்வகையில் ஐந்து மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் 641 முகாம்கள், நகராட்சிகளில் 632 முகாம்கள், பேரூராட்சிகளில் 520 முகாம்கள், புறநகர் பகுதிகளில் 265 முகாம்கள் என ஒரு வார்டுக்கு ஒரு முகாம் விதம் மொத்தம் 2058 முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம்களை நடத்த அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஜூலை 15 முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் பெறப்படும் மனுக்கள் ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15 முதல் தீர்வு காணும் எனும் நோக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu