குழந்தை தொழிலாளர் சட்ட விதிகள் குறித்த நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

February 24, 2023

கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவது தொடர்பாக தமிழ், ஆங்கிலத்தில் தமிழக தொழிலாளர் துறை தயாரித்துள்ள புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொத்தடிமை தொழிலாளர் முறையை 2030-ம் ஆண்டுக்குள்ளும், குழந்தை தொழிலாளர் முறையை 2025-ம் ஆண்டுக்குள்ளும் முற்றிலுமாக அகற்ற தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த இலக்கை அடையும் வகையில், கொத்தடிமை, குழந்தை தொழிலாளர்களை அடையாளம் காணுதல்,விடுவித்தல், மீட்டெடுத்தல், மறுவாழ்வு அளித்தல், இதுதொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை […]

கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவது தொடர்பாக தமிழ், ஆங்கிலத்தில் தமிழக தொழிலாளர் துறை தயாரித்துள்ள புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொத்தடிமை தொழிலாளர் முறையை 2030-ம் ஆண்டுக்குள்ளும், குழந்தை தொழிலாளர் முறையை 2025-ம் ஆண்டுக்குள்ளும் முற்றிலுமாக அகற்ற தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த இலக்கை அடையும் வகையில், கொத்தடிமை, குழந்தை தொழிலாளர்களை அடையாளம் காணுதல்,விடுவித்தல், மீட்டெடுத்தல், மறுவாழ்வு அளித்தல், இதுதொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக தொழிலாளர் துறை தயாரித்துள்ள ‘கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்’ மற்றும் ‘குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்’ ஆகிய 2 தலைப்புகளிலான தமிழ், ஆங்கில புத்தகங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu