பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி

October 20, 2023

ஆன்மீக பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் உடல் நலக் குறைவால் நேற்று மாலை 5 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த ஓராண்டிற்கும் மேலாக பங்காரு அடிகளார் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மரணச் செய்தி அறிந்த பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர். அடிகளார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. உடல் அடக்கம் […]

ஆன்மீக பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் உடல் நலக் குறைவால் நேற்று மாலை 5 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக பங்காரு அடிகளார் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மரணச் செய்தி அறிந்த பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர். அடிகளார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதலமைச்சர். மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பங்கரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் மற்றும் அவரது மனைவி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, தாமு அன்பரசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu