முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி - அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

January 24, 2023

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 2022-23ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் மாவட்டம் மற்றும் […]

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 2022-23ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் மாவட்டம் மற்றும் மண்டல அளவில் சிலம்பம், கபடி, கிரிக்கெட், இறகுப்பந்து, கால்பந்து உள்ளிட்ட 15 விளையாட்டுகள் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டுகளில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது இந்த போட்டி நடத்தப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu