வெளிமாநில தொழிலாளர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் காவல்கிணறு பகுதியிலுள்ள கையுறை தயாரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு முதல்வர் சென்றார். அங்கு பணிபுரியும் பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இங்கு பணிபுரியும் 450 தொழிலாளர்களில் 30 பெண்கள் உட்பட 150 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். முதல்வர் அவர்களிடம் ‘எத்தனை ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து […]

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் காவல்கிணறு பகுதியிலுள்ள கையுறை தயாரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு முதல்வர் சென்றார். அங்கு பணிபுரியும் பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இங்கு பணிபுரியும் 450 தொழிலாளர்களில் 30 பெண்கள் உட்பட 150 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

முதல்வர் அவர்களிடம் ‘எத்தனை ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வருகிறீர்கள், பணிச்சூழல் எப்படி இருக்கிறது, இங்குள்ள மக்கள் உங்களுடன் நல்ல முறையில் பழகுகிறார்களா, உங்களுக்கு இங்கு ஏதாவது இடர்பாடுகள் இருக்கிறதா' என்று கேட்டறிந்தார். அப்போது அந்த தொழிலாளர்கள் இங்கு எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் சொந்த ஊரில் இருப்பது போலவே பாதுகாப்பாக வாழ்வதாக தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu