தமிழகத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்கம்

August 7, 2025

தமிழக அரசு, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் நலத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இனி, ரேசன் பொருட்கள் நேரடியாக அவர்களின் வீடுகளிலேயே கிடைக்கும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட மொத்தம் 16.73 இலட்சம் குடும்ப அட்டையாளர்களின் வீடுகளுக்கே ரேசன் பொருட்கள் நேரடியாக வழங்கப்படும். மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், […]

தமிழக அரசு, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் நலத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இனி, ரேசன் பொருட்கள் நேரடியாக அவர்களின் வீடுகளிலேயே கிடைக்கும்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட மொத்தம் 16.73 இலட்சம் குடும்ப அட்டையாளர்களின் வீடுகளுக்கே ரேசன் பொருட்கள் நேரடியாக வழங்கப்படும். மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மூடிய வாகனங்களில் மின்னணு எடைத்தராசு மற்றும் e-PoS இயந்திரங்களுடன் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர். மக்கள் நலனுக்காக ரூ.30.16 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், நலிவுற்ற பிரிவினரின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய முயற்சியாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu