காவல் துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் சிறப்பாக பணி செய்த 544 போலீஸாருக்கு முதல்வர் காவல் பதக்கங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.
தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு முதல்வர் காவல் பதக்கங்கள், அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டுக்கான முதல்வர் காவல்பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகர காவல் துறையில் 544 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் காவல் பதக்கங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் வழங்கினார்.