முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை திருச்சிக்கு பயணம் செய்ய உள்ளார். இதனால் திருச்சியில் சில இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் தஞ்சை மாவட்டத்திற்கு காரில் செல்கிறார். நிகழ்ச்சி நிறைவடைந்து நாளை மாலை 6:30 மணி அளவில் தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து மீண்டும் சென்னை வந்தடைகிறார்.எனவே இதில் முதலமைச்சரின் பாதுகாப்பு கருதி முதலமைச்சர் பயணம் செய்யும் சாலைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடபட்டால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.