பிரிட்டன் - முதல் முறையாக 3 பேரின் மரபணுக்களுடன் பிறந்த குழந்தை

பிரிட்டனில் முதல்முறையாக, 3 நபர்களின் மரபணு (டிஎன்ஏ) கூட்டமைப்பில் குழந்தை பிறந்துள்ளது. உலக அளவில் 98.8% குழந்தைகள் தங்கள் இரு பெற்றோர்களின் மரபணுக்களை கொண்டிருப்பார்கள். முதல் முறையாக, செயற்கை கருத்தரிப்பு முறையில், 3 நபர்களின் மரபணுக்களைக் கொண்டு பிரிட்டனில் முதல் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே, இதே போன்ற செயற்கை முறையில், மெக்சிகோவில் குழந்தை பிறந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மரபணு கோளாறு உள்ள தாய்க்கு இந்த முறையில் குழந்தை பிறப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு பெண்ணின் கருமுட்டையில் இருந்து கருவை எடுத்து, […]

பிரிட்டனில் முதல்முறையாக, 3 நபர்களின் மரபணு (டிஎன்ஏ) கூட்டமைப்பில் குழந்தை பிறந்துள்ளது. உலக அளவில் 98.8% குழந்தைகள் தங்கள் இரு பெற்றோர்களின் மரபணுக்களை கொண்டிருப்பார்கள். முதல் முறையாக, செயற்கை கருத்தரிப்பு முறையில், 3 நபர்களின் மரபணுக்களைக் கொண்டு பிரிட்டனில் முதல் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே, இதே போன்ற செயற்கை முறையில், மெக்சிகோவில் குழந்தை பிறந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மரபணு கோளாறு உள்ள தாய்க்கு இந்த முறையில் குழந்தை பிறப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஒரு பெண்ணின் கருமுட்டையில் இருந்து கருவை எடுத்து, மற்றொரு பெண்ணின் ஆரோக்கியமான மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ வை தக்க வைத்துக் கொண்டு, ஐவிஎஃப் முறையில் ஆரோக்கியமான கருமுட்டை உருவாக்கப்படுகிறது. இந்த முறையில், பிரிட்டனில், ஒரு பெண்ணின் கருமுட்டையுடன், கருமுட்டை தானம் அளித்த மற்றொரு பெண்ணின் கருமுட்டை இணைக்கப்பட்டு, ஆரோக்கியமான கருமுட்டை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த முறையில் பிறந்துள்ள குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குழந்தையின் விவரங்கள் பகிரப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu