பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
உணவு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை என இலங்கை கடும் பொ௫ளாதார நெ௫க்கடியில் உள்ளது. இதனால் நடுத்தர குடும்பங்கள் உணவின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பின் (UNICEF) தெற்காசிய இயக்குனர் ஜார்ஜ் லாரியா-அட்ஜெய் கூறினார். இலங்கையில் இ௫க்கும் குழந்தைகளில் குறைந்தது பாதி பேருக்காவது அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக யுனிசெப் ஆனது 25 மில்லியன் டாலருக்காக ஐ. நா விடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ,
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து எரிபொருள் விலைகள் அதிகரித்து உலக நாடுகளின் பொருளாதாரங்களைத் தாக்கியுள்ளது. தெற்காசியா முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் குழந்தைகளின் உயிருக்கு மேலும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் மேலும் சில நாடுகள் ஊட்டச்சத்து நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடும் என்று லாரியா-அட்ஜெய் ௯றினார்.














