பொலிவியா லித்தியம் ஆலைகளில் 1.4 பில்லியன் டாலர்கள் முதலீடு - சீனா மற்றும் ரஷ்யா திட்டம்

June 30, 2023

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், அதிக அளவில் லித்தியம் கனிமம் உள்ளது. இது மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் மற்றும் மின்னணு சாதனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பொலிவியாவில் 1.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான திட்டங்களில் முதலீடு செய்ய சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாகியுள்ளது. பொலிவியா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். சீனாவை சேர்ந்த CBC நிறுவனம், 1 பில்லியன் […]

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், அதிக அளவில் லித்தியம் கனிமம் உள்ளது. இது மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் மற்றும் மின்னணு சாதனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பொலிவியாவில் 1.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான திட்டங்களில் முதலீடு செய்ய சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாகியுள்ளது. பொலிவியா, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

சீனாவை சேர்ந்த CBC நிறுவனம், 1 பில்லியன் டாலர் முதலீட்டில் 2 லித்தியம் ஆலைகளை பொலிவியாவில் அமைக்க உள்ளது. ரஷ்யாவை சேர்ந்த யுரேனியம் ஒன் குரூப் நிறுவனம் 578 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளது. மேலும், சீனாவின் Citic Guoan நிறுவனம் 857 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆலையிலும் வருடத்திற்கு 25000 மெட்ரிக் டன் அளவில் லித்தியம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொலிவியாவை பொறுத்தவரை, லித்தியம் ஆலைகள் மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu