கடந்த மாதம் 25- ஆம் தேதிக்கு பின் சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வெளியில் தோன்றவில்லை. அதன் பின்னர் அவர் எங்கு உள்ளார் என்பது குறித்த எந்த விவரமும் வெளியாகவில்லை. தற்போது புதிய மந்திரியை சீன அரசு நியமித்துள்ளது.
சீனாவில் குயின் கேங் என்றவர் சீன வெளியுறவு துறை மந்திரியாக 2002 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார். இவர் கடந்த ஜூன் 25ஆம் தேதி ரஷ்யா, வியட்நாம், இலங்கை ஆகிய நாடுகளின் மந்திரிகளை சந்தித்தார். அதன் பின் பொது வெளியில் தோன்றவில்லை.
மேலும் ஜூலை 4-ம் தேதி சீன வெளியுறவுத்துறை மந்திரிக்கும் ஐரோப்பிய யூனியன் வெளியுறவு கொள்கை தலைவருக்கும் இடையான சந்திப்பை சீனா ரத்து செய்தது. அதன் பின் சீன வெளியுறவுத்துறை மந்திரி குயின் கேங் எந்த ஒரு மாநாட்டிலும் கலந்து கொள்ளவில்லை. கடந்த ஒரு மாதமாக இவர் வெளியில் தோன்றாத நிலையில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக வாங் யு செயல்படுவார் என சீன அரசு நியமித்துள்ளது. அதேவேளை குயின் - யை மந்திரி பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.