சீனா - கொரோனா கட்டுப்பாடுகள் எதிர்ப்பு மக்கள் போராட்டத்தை பதிவு செய்த பிபிசி நிருபர் கைது

November 28, 2022

சீனாவில், ஜீரோ கோவிட் பாலிசி என்ற பெயரில் தீவிர கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதனை எதிர்த்து, மக்கள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்கள் போராட்டங்களை பதிவு செய்த பிபிசி நிருபரை சீன காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. நேற்று, சீனாவின் பல முக்கிய நகரங்களில், கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து, நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். இந்நிலையில், லாரன்ஸ் என்ற பிபிசி நிருபர், ஷாங்காயில் நடந்த […]

சீனாவில், ஜீரோ கோவிட் பாலிசி என்ற பெயரில் தீவிர கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதனை எதிர்த்து, மக்கள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்கள் போராட்டங்களை பதிவு செய்த பிபிசி நிருபரை சீன காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

நேற்று, சீனாவின் பல முக்கிய நகரங்களில், கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து, நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். இந்நிலையில், லாரன்ஸ் என்ற பிபிசி நிருபர், ஷாங்காயில் நடந்த போராட்டத்தை பதிவு செய்த போது, கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் எட்டி உதைத்து, அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு பின்னர், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிபிசி கண்டனம் தெரிவித்துள்ளது. கடமையை செய்ய வந்த நிருபரை இவ்வாறு நடத்தியதற்காக மிகவும் வருந்துவதாகவும், சீன அதிகாரிகள் இதற்கான எந்தவித விளக்கமோ, மன்னிப்போ கூற வேண்டியது இல்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu