சீன அரசு அதிகாரிகள் ஐபோன் பயன்படுத்த தடை

September 6, 2023

சீனாவில், அரசாங்க அதிகாரிகள் தங்கள் பணியின் போது ஐபோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக, சீனா, தகவல் பாதுகாப்பு சார்ந்த முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஐபோன் மற்றும் வெளிநாட்டு கைபேசிகளை பயன்படுத்துவதற்கு அரசாங்க அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சாதனங்களை அலுவலகத்துக்கு கொண்டு வர வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முன்னதாக, சீனாவின் முக்கிய சிப் தயாரிப்பு வர்த்தகத்தை அமெரிக்கா கைவிட்டது. அதே வேளையில், சீனா, போயிங், மைக்ரான் போன்ற நிறுவனங்களின் […]

சீனாவில், அரசாங்க அதிகாரிகள் தங்கள் பணியின் போது ஐபோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக, சீனா, தகவல் பாதுகாப்பு சார்ந்த முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஐபோன் மற்றும் வெளிநாட்டு கைபேசிகளை பயன்படுத்துவதற்கு அரசாங்க அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சாதனங்களை அலுவலகத்துக்கு கொண்டு வர வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முன்னதாக, சீனாவின் முக்கிய சிப் தயாரிப்பு வர்த்தகத்தை அமெரிக்கா கைவிட்டது. அதே வேளையில், சீனா, போயிங், மைக்ரான் போன்ற நிறுவனங்களின் வர்த்தகத்தில் இருந்து வெளியேறியது. மேலும், சீனா தனது தற்சார்பு நிலையை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, சீனாவின் இந்த அறிவிப்பு அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான பதட்ட சூழலை மேலும் அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu