தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபடும் சீனா

May 23, 2024

இன்று, தைவான் நாட்டை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தைவான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்துள்ளது. தைவான் நாட்டை அச்சுறுத்தும் விதமாக, சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. முற்றிலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தைவான் நாட்டின் புதிய அதிபராக வில்லியம் லாய் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சீனாவின் போர் பயிற்சி உள்ளதாக கூறப்படுகிறது. தைவான் கட்டுப்பாட்டில் உள்ள கின்மேன், வகியூ, மாட்சு, டோங்கியின் […]

இன்று, தைவான் நாட்டை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தைவான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்துள்ளது.

தைவான் நாட்டை அச்சுறுத்தும் விதமாக, சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. முற்றிலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தைவான் நாட்டின் புதிய அதிபராக வில்லியம் லாய் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சீனாவின் போர் பயிற்சி உள்ளதாக கூறப்படுகிறது. தைவான் கட்டுப்பாட்டில் உள்ள கின்மேன், வகியூ, மாட்சு, டோங்கியின் ஆகிய தீவுகளை சுற்றியும், தைவான் ஜலசந்தியை சுற்றியும் சீனாவின் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தைவானின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்நாட்டின் ராணுவம் உச்சகட்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி, “தைவான் ராணுவத்தினரின் பிரிவினைவாத செயல்களுக்கு இது தக்க தண்டனை. மேலும், வெளிப்புற சக்திகளின் தலையீட்டுக்கு வலுவான எச்சரிக்கை” என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu