பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஷாகித் மஹ்மூத்தை உலகளாவிய பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநா சபையில் இந்தியாவும் அமெரிக்காவும் முன்மொழிந்தது. ஆனால் இதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க கருவூலத் துறை டிசம்பர் 2016 இல் மஹ்மூத்தை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தி௫க்கிறது. இந்நிலையில்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல்கொய்தா தடைக் குழுவின் கீழ் மஹ்மூத்தை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா மற்றும் அமெரிக்கா முன்வைத்த முன்மொழிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததாக ௯றப்படுகிறது. பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுப்பது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.