சீனாவில் நூற்றுக்கணக்கான மசூதிகள் இடிப்பு

November 23, 2023

சீனாவில் நூற்றுக்கணக்கான மசூதிகள் இடிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சீனாவில், ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி தொடங்கப்பட்டதில் இருந்து, சீன பாரம்பரியம் அல்லாத மதத்தவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நிங்சியா, கண்ஷோ ஆகிய மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் தகவல்களின்படி, 6 மசூதிகளின் வட்ட வடிவ மேற்கூரை அகற்றப்பட்டுள்ளது; […]

சீனாவில் நூற்றுக்கணக்கான மசூதிகள் இடிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சீனாவில், ஜி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி தொடங்கப்பட்டதில் இருந்து, சீன பாரம்பரியம் அல்லாத மதத்தவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நிங்சியா, கண்ஷோ ஆகிய மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் தகவல்களின்படி, 6 மசூதிகளின் வட்ட வடிவ மேற்கூரை அகற்றப்பட்டுள்ளது; 4 மசூதிகளில் முழுவடிவ சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது; 3 மசூதிகள் முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு ஆவணங்களில் உள்ள தகவல்களின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட மசூதிகள் இந்த பட்டியலில் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu