கனடாவில், சீன தூதர் Zhao Wei மீது, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்படி, கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மேலன் ஜோலி, அவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
கனடாவின் இந்த நடவடிக்கைக்கு பழிக்கு பழி நடவடிக்கையாக, சீனா, கனடா தூதரை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஷாங்காயில் உள்ள கனடா நாட்டு தூதர் ஜெனிபர் லின் லைலோண்ட், வரும் மே 13 ஆம் தேதிக்கு முன்பாக சீனாவில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் சீனா - கனடா உறவில் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தி உள்ளது.














