அருணாசல பிரதேசத்தில் அரிய வகை மூலிகைக்காக சீனா ஊடுருவல்

December 27, 2022

அருணாசல பிரதேசத்தில் விலையுயர்ந்த அரிய வகை மூலிகைக்காக சீனா ஊடுருவி உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது. இமயமலை பகுதிகளில் 3,000 முதல் 5,000 அடி உயரத்தில் கார்டிசெப்ஸ் பங்கஸ் என்ற பெயரிலான அரிய வகை மூலிகைகள் வளர்ந்து காணப்படுகின்றன. தென்மேற்கு சீனாவிலும் இவை உள்ளன. இமயமலையின் தங்கம் என அழைக்கப்படும் இந்த அரிய மூலிகை விலைமதிப்பற்றது. சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை மதிப்பு கொண்டது. சர்வதேச அளவில் 2022-ம் ஆண்டில் […]

அருணாசல பிரதேசத்தில் விலையுயர்ந்த அரிய வகை மூலிகைக்காக சீனா ஊடுருவி உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.

இமயமலை பகுதிகளில் 3,000 முதல் 5,000 அடி உயரத்தில் கார்டிசெப்ஸ் பங்கஸ் என்ற பெயரிலான அரிய வகை மூலிகைகள் வளர்ந்து காணப்படுகின்றன. தென்மேற்கு சீனாவிலும் இவை உள்ளன. இமயமலையின் தங்கம் என அழைக்கப்படும் இந்த அரிய மூலிகை விலைமதிப்பற்றது. சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை மதிப்பு கொண்டது. சர்வதேச அளவில் 2022-ம் ஆண்டில் ரூ.8,859.81 லட்சம் கோடி அளவுக்கு சந்தையில் இந்த மூலிகை விலை போயுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் இதன் விளைச்சல் குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த மூலிகையை தேடி அருணாசல பிரதேசத்தில் சட்டவிரோத ஊடுருவலில் சீன வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனை இந்தோ-பசிபிக் உயர்மட்ட தொலைதொடர்பு மையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu