சீனாவின் பிரபல பட்ஜெட் ஷாப்பிங் தளமாக pinduoduo அறியப்படுகிறது. இந்நிலையில், இந்த தளத்தில் மால்வேர் அல்லது வைரஸ் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதால், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய pinduoduo நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “எங்களுக்கு கூகுள் இடம் இருந்து செயலியில் மால்வேர் உள்ளதாக தகவல் கிடைத்தது. இந்த சிக்கலுக்கு தீர்வு காண கூகுள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேலும், எங்கள் செயலியுடன் சேர்த்து பல்வேறு நிறுவனங்களின் செயலிகளும் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். pinduoduo தளத்திற்கு கிட்டத்தட்ட 900 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.