சீனாவில் நெடுஞ்சாலை இடிந்து விழுந்த விபத்தில் 48 பேர் உயிரிழப்பு

May 2, 2024

தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் நெடுஞ்சாலை பகுதி ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து நேர்ந்துள்ளது. இன்று அதிகாலையில் நெடுஞ்சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திடீர் பள்ளத்தால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து பள்ளத்தில் விழுந்துள்ளன. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், உயிர் இழப்புகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சுமார் 184.3 சதுர மீட்டர் அளவுக்கு நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் […]

தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் நெடுஞ்சாலை பகுதி ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து நேர்ந்துள்ளது. இன்று அதிகாலையில் நெடுஞ்சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திடீர் பள்ளத்தால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து பள்ளத்தில் விழுந்துள்ளன. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், உயிர் இழப்புகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சுமார் 184.3 சதுர மீட்டர் அளவுக்கு நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் உருவாகி உள்ளது. பள்ளத்தில் கிட்டத்தட்ட 20 வாகனங்கள் விழுந்துள்ளன. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து தேடுதல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில், அந்த பகுதியில் பெய்த கனமழையை அடுத்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu