சீனாவில் மா்மக் காய்ச்சல் பரவுகிறது - உலக சுகாதார அமைப்பு

November 24, 2023

சீனாவில் வேகமாக பரவி வரும் மர்மம் காய்ச்சல் குறித்து ஐநா சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறியுள்ளதாவது, சீனாவில் புதிய வகை நுண்கிருமியால் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றனர் என்று ஊடகங்கள் கூறியுள்ளன. அதோடு சீன குழந்தைகளிடையே புதிய வகை காய்ச்சல் பரவி வருவதாகவும் சர்வதேச பரவல் நோய் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. அந்த மர்ம காய்ச்சல் சுவாச பாதை வழியாக பரவுகிறதா என்பது குறித்தும் […]

சீனாவில் வேகமாக பரவி வரும் மர்மம் காய்ச்சல் குறித்து ஐநா சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு கூறியுள்ளதாவது, சீனாவில் புதிய வகை நுண்கிருமியால் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றனர் என்று ஊடகங்கள் கூறியுள்ளன. அதோடு சீன குழந்தைகளிடையே புதிய வகை காய்ச்சல் பரவி வருவதாகவும் சர்வதேச பரவல் நோய் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. அந்த மர்ம காய்ச்சல் சுவாச பாதை வழியாக பரவுகிறதா என்பது குறித்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இத்தகைய தகவல் கவலை அளிக்கிறது. எனவே இந்த நோய் தொடர்பான தகவல்களை சீன அரசு எங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவை போல் உலகையே மீண்டும் அச்சுறுத்தும் நோயாக இந்த நோய் பரவக்கூடும் என்று ஒரு சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சார்ஸ், கொரோனா போன்ற நோய் தொற்றுகள் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படாத காய்ச்சலாக தான் தொடங்கின என்பதையும் இவர்கள் கூறுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu